July 21, 2020

மழை!

திகைக்க திகைக்க கொட்டினாலும் 
திகட்டாத இன்பம் நீ! 
நான் தவிக்க தவிக்கத் தேடினேன் 
என் தேடல் தீர தினமும் திசையெங்கும்
ஆர்பாட்டத்துடன் ஆட்டம்போட்டாய் 
ஓர் இரு துளிகள் போதும் என்ற என்னிடம் 
ஓர் இரு வாரமாய் வலிக்காமல் 
வாரித் தருகிறாய் வள்ளலாய் 
மூச்சு முட்ட முழங்குகிறாய் ஆனந்த மேளம் 
என்னாவது ஏழை என் மனம் 
சற்றே தவிக்கவிட்டு தா போதும் 
நிஜமான நிதர்ஷணம் நினைவில் இல்லை 
சில நாட்கள் நீடிக்கும் உன் கனா 
வினாவின்றி வழிமொழிகிறேன் 
உன் வெள்ளாற்றில்...

No comments: