கணினி மாயையில் கண் இமைக்க கனமில்லாமல் காணாமல் போனேன்
கானகத்தில் காதல் செய்ய ஆவல் ஆயிரம்
கண் அசைவின் அழகில் ஆழ்ந்திட ஆசை
நா அசைவில் நெகிழ்ந்திட ஆசை
சிகை முதல் கால் விறல் நகை வரை
நிகழும் நிதர்ஷனத்தில் நிமிடங்கள் மறந்திட ஆசை
கடமையின் காலில் அடிமையாய்
நேரமின்றி நலிந்துதான் போனேன்
நகைச்சுவையும் அருசுவையும் கூட
அரைமனத்தில் அவசரமாய் அனுபவிக்கும் எனக்கு
அறிவிழந்து ஆத்மார்த்தமாய் அழகில்
திளைத்திட துணிச்சல் இல்லை
கடமைக்காய் காதலித்து சமூகத்தை சாடி
சலித்து போகும் சாமானியனும் இல்லை நான்
கலைத்து போகாமல் காதல் கவி பாடும்
கவிஞனாய் போனேன் காலத்தின் கட்டாயத்தில்
கடமையில் மடமையாய் மதி மயங்க
காதலிக்க காலமில்லாத கண்ணியவானை கலைந்திடுவேன்!
No comments:
Post a Comment