மாதராய் பிறந்திட மாதவம் செய்திட வேண்டுமாம்
அப்படி மாதவம் செய்திட்டதாலோ
தன மதி இருபினும் தந்தயினோ தமயநினோ
அல்லது தமைந்தனின் சாயலின்றி
சுய சிந்தனையை சற்று உரக்க கூற இயலவில்லையோ!
அப்படி மாதவம் செய்திட்டதாலோ
பேருந்து நெரிசலில் தசை உரசிப்பார்க்கும்
நாயாய் போன ஆடவர்களை கண்டு
உரக்க பேச உரமில்லையோ!
தெருவோரங்களில் கேளிபேசி பெண்ணின்
ஆடை அசைவையும் அங்க அசைவையும்
எடை போடும் சாலையோர சல்லிக்காரர்களை
எதிர்த்து நின்று எள்ளி நகையாட வழியில்லையோ!
அப்படி மாதவம் செய்திட்டதாலோ
மொட்டாய் மலர்ந்து இதமாய் விரிந்து
சுகந்தம் தந்த காதலை கத்தி சொல்ல
திடமில்லையோ!
உயிர் காதலை உரக்க சொன்னால்
சுயமற்ற லயமற்ற பெண்ணென்று துற்றுவாரை
எதிர்கொள்ள வீரமில்லையோ!
பாரதியும் கண்ணீர் சிந்துவான்
அம்மம்மா எதனை பிஞ்சு குழந்தைகள்
காமக்குருடர்களுக்கு பழியாகின்றனர்
பெண்ணியமென்று கத்துகின்றனர் மேடைதோறும்
அவையெல்லாம் பகட்டாய் பேசி பட்டாடையில் உலவும்
அதிர்ஷ்டம் செய்து ஓரிரு மாதருக்கு
பெண்ணை உங்கள் கண்ணாய் போற்றிட வேண்டாம்
பெண்ணை பொருளாக்கிவிடாதீர்!!!
1 comment:
nice..
Post a Comment