November 14, 2018

சமூகத்தின் எதிர்மறை நான்

என்னை எனையாகவே ஏற்கா
சமூகத்தின் சாடல்களுக்கு
அஞ்சி, உணர்வை வதைத்து
ஊருக்காக உறவாட
உயிர் உள்ளவரை உரையாடும்
உறவை ஏற்படுத்தா நான்
ஒரு நடமாடும் பைத்தியம்!
சரியான வயது
சரியான சம்பளம்
சரியான ஜாதகம்
சரியான சாதி
சரியான சமயம்
சமூகத்தின் அளவுகோல் பிசகாமல்
சரியாக வாழும் சமூகவாதிகள்
மத்தியில் மதியிலாள் நானன்றோ!
நாட்கள் நகர்கின்றன
தனிமையின் இனிமையில்
கனவுகள் குறையவில்லை
நாளையின் பயமில்லை
இனம்புரியா ஈர்ப்பு
நிழலாடும் நினைவுகள் மீது
நிஜமில்லையெனில் நிச்சயமில்லை
நிஜமெனில் உணர்வு உணர்த்தும்
அறிவின் அறிவுரையின்றி
அதுவரை அஞ்சேன் நான்
சாடட்டும் சமூகம் என்னை
சரியாய் சார்ந்து வாழ
ஊரெல்லாம் உள்ளோர் பலர்
என்போல் வெகு சிலர்
சரிந்துவிடினும் சலனப்படார்...
வெற்றியோ வீழ்ச்சியோ
என் சிற்பத்தின் உளி
என் கையில்!

No comments: