March 8, 2026

நானே எனக்கு போதும்

கண்கள் கொள்ளா கொள்ளைக் கொள்ளையாய்
கொட்டிவைத்த கனவுகள் 
காலம் கரைந்து ஓடியபின்னும்... 
கனவுகள் மட்டும் கரையவில்லையே 
காதலித்து களைத்து போன பின்னும் 
காதலின் மீது மட்டும் களைப்பு வரவில்லை
அன்பின் ஆற்றலின்றி நிகழ்காலத்தின் 
நிர்பந்தத்தில் சிக்கி சிதைந்துக் கொண்டிருக்கிறேன்...
மனதோரத்தில் ஏக்கம்:
சட்டென பட்ட மரம் துளிர்க்காதோ 
இம்முறையேனும் மாற்றம் மலராதோ 
உறவுகள் அறிவுரைத்த போதும்  
சரியென்று சலிப்பு வரவில்லை என் மேல் எனக்கு!


No comments: